சினிமா

டக்குனு விஜய்க்கு முழு ஆதரவு அளித்த ப்ளூ சட்டை.. அட! இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே

Published

on

டக்குனு விஜய்க்கு முழு ஆதரவு அளித்த ப்ளூ சட்டை.. அட! இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே

டாப் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு ப்ளூ சட்டை என்றாலே கொஞ்சம் தலைவலி தான். இஷ்டத்திற்கு படங்களுக்கு விமர்சனம் கொடுத்து திட்டு வாங்கிக் கொள்வதும் அவருக்கு வழக்கம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் திடீரென நடிகர் விஜய்க்கு இவர் ஆதரவு அளித்திருப்பது எல்லோருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

நேற்று வரை ப்ளூ சட்டையை கடிந்து கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர் போட்ட ஒரு சமூக வலைதள பதிவுதான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விஜய் சினிமாவில் காலாவதியாகி விட்டதால் அரசியலுக்கு வந்திருக்கிறார் என விமர்சனம் வைத்தார்.

இதற்கு ப்ளூ சட்டை விமர்சனம் செய்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. விஜய் இன்று வரை நம்பர் ஒன் ஹீரோ. அவருடைய சினிமா வியாபாரங்கள் பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

அது மட்டும் இல்லாமல் திருமாவளவன் நடித்த அன்பு தோழி படத்தை குறிப்பிட்டு உங்கள் காலத்தில் திடீரென உங்களுக்கு மாஸ் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வரவில்லையா. அது மாதிரி தான் அவருக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version