சினிமா
நடிகர்களுக்கான புதிய வருமான வாய்ப்பு.. – விஷ்ணு விஷால் எடுத்த முடிவு!
நடிகர்களுக்கான புதிய வருமான வாய்ப்பு.. – விஷ்ணு விஷால் எடுத்த முடிவு!
தமிழ் சினிமாவில் இப்பொழுது ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது டிஜிட்டல் பிஸ்னஸ். மேலும் இந்த டிஜிட்டல் பிஸ்னஸ் தான் ஹீரோக்களின் மார்க்கெட்டேயே தீர்மானிக்கின்றது. நடிகர்கள் நடிக்கும் படங்களின் வெற்றி மற்றும் தோல்வி என்பவற்றைத் தீர்மானிப்பதுடன் நடிகர்களின் பெயரை நிலைநிறுத்தவும் டிஜிட்டல் ரைட்ஸ் முக்கிய இடம் வகிக்கின்றது.அந்தவகையில், விஷ்ணு விஷாலின் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளன. எனினும், அவர் தொடர்ந்து நடித்து வருவதோடு மட்டுமல்லாமல், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் எடுத்து வருகின்றார்.இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் அவரின் நண்பர்கள் என்பது தான். இதனால் விஷ்ணு விஷாலின் படங்களை தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு டிஜிட்டல் ரைட்ஸில் விற்கும் போது எந்தப் பிரச்சினையும் இருக்காது என சிலர் கூறுகின்றனர்.மேலும், விஷ்ணு விஷாலின் படங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் டிஜிட்டல் நிறுவனங்கள் ரைட்ஸை வாங்கி விடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.