உலகம்

4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

Published

on

Loading

4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

இஸ்ரேல் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதை ஒட்டி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளில் நான்கு பேரின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது.

செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் நான்கு பேரின் உடல்களை ஒப்படைத்ததை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். 

Advertisement

எகிப்து இடைத்தரகர்கள் உதவியோடு நான்கு பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நான்கு பேரை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நான்கு பேரின் உடல்கள் வழங்கப்பட்ட அதே நேரத்தில் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை செஞ்சிலுவை சங்க வாகனம் ஏற்றிவந்தது. 

பாலஸ்தீனர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெய்துனியாவில் கூடினர்.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version