பொழுதுபோக்கு

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ரச்சிதா மகாலட்சுமி ரீசன்ட் க்ளிக்ஸ்!

Published

on

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ரச்சிதா மகாலட்சுமி ரீசன்ட் க்ளிக்ஸ்!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு என்டரி ஆனார்.ரீ-என்டரியில் ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.சின்னத்திரை மட்டுமல்லாமல், தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ள ரச்சிதா, கடந்த ஆண்டு கன்னடத்தில் ரங்கநாயகா, மற்றும் தமிழில் எக்ஸ்ட்ரீம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் ஃபையர் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் ஒரு பாடலில் ரச்சிதா க்ளாமராக நடித்திருந்தது கடுமையாக விமர்சனங்களை கொடுத்தது.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரச்சிதா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version