உலகம்
அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!
அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து பெர்த் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானமொன்று விமானிகள் அறையில் ஏற்பட்ட புகை காரணமாக, அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, விமானம் பயணிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் புறப்பட்டு சுமார் 25 நிமிடங்களின் பின்னர், மீண்டும் சிட்னியில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.