விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

Published

on

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

Advertisement

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். 

இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் கண்டது. 

இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.

Advertisement

மறுபுறம் துணை கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். 

இதையடுத்து விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இதில் விராட் கோலி அரைசதம் கடந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement

கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version