இலங்கை

அமெரிக்காவில் ரகசிய சேவை முகவரான 13 வயது சிறுவன் : டிரம்பின் நெகிழ்ச்சி செயல்

Published

on

அமெரிக்காவில் ரகசிய சேவை முகவரான 13 வயது சிறுவன் : டிரம்பின் நெகிழ்ச்சி செயல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் காங்கிரசில் தனது முதல் கூட்டுக் கூட்டத்தொடரின் போது, ​​பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வரும் 13 வயது சிறுவன் டிஜே டேனியலை கௌரவ ரகசிய சேவை முகவராக நியமித்து நாட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்

கேலரியில் அமர்ந்திருந்த டிஜே டேனியல் பற்றிய கதையை டிரம்ப் அவையில் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

டேனியேலுக்கு 2018 ஆம் ஆண்டில் ஒரு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவருக்கு ஐந்து மாதங்கள் மட்டுமே உயிர்வாழக் கொடுக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்தினார்.

ஆனால், அனைத்து சவால்களையும் மீறி, தற்போது வரை டேனியல் போராடி வருகிறார் எனவும், ஒரு பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவை ஒருபோதும் கைவிடவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் டிஜே, நாங்கள் உங்களுக்கு மிகப்பெரிய மரியாதையைச் செய்யப் போகிறோம். எங்கள் புதிய ரகசிய சேவை இயக்குனர் சீன் குர்ரானை,  அதிகாரப்பூர்வமாக அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக ஆக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று டிரம்ப் அறிவித்தார்.

Advertisement

டிரம்பின் அறிவிப்பால் சபை கைதட்டலால் அதிர்ந்தது. அனைத்து கட்சியினரும் ஒரு அரிய தருணத்தில் ஒற்றுமையுடன் சேர்ந்து, DJ-ஐக் கொண்டாட எழுந்து நின்றனர்.

அவரது தந்தை உணர்ச்சிவசப்பட்டு, DJ-ஐ காற்றில் தூக்க, அரங்கமே அவரது பெயரை “DJ! DJ!” என்று கோஷமிட்டது.

பின்னர் ரகசிய சேவை இயக்குனர் குர்ரான்  அவருக்கு ஒரு அதிகாரப்பூர்வ பேட்ஜை வழங்கியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version