இலங்கை

சுமந்திரன் கனவை நிராசையாக்கிய சிறிதரன் எம்.பி!

Published

on

சுமந்திரன் கனவை நிராசையாக்கிய சிறிதரன் எம்.பி!

  வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தனக்கு இல்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார்.

அதோடு மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவெ மேலும் கூறுகையில்,

Advertisement

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தனிநபர் பிரேரணை கூட கொண்டுவரப்பட்டிருந்தது.

ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.கூட்டமைப்பும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயாரில்லை எனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேவேளை முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போட்டியிடுவார் என்றும், அதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு தான் நாடாளுமன்றம் செல்ல தயாராக இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version