இலங்கை

தந்தையின் தாக்குதலில் பல்கலை மாணவன் காயம்

Published

on

தந்தையின் தாக்குதலில் பல்கலை மாணவன் காயம்

  இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் தந்தையால் தாக்கப்பட்டு மகன் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மகனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தன்று, மகன் வீட்டினுள் பாடவேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் சந்தேக நபரான தந்தை தனது மகனின் தலையில் பொல்லால் தாக்கியுள்ளார்.

Advertisement

பின்னர், சந்தேக நபரான தந்தை தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தந்தையும் மகனும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version