இலங்கை
தந்தை பிள்ளைகள் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது
தந்தை பிள்ளைகள் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது
மாத்தறை மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்ற நபரும் அவரது இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் தந்தையும் பிள்ளைகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.