இலங்கை
தினமும் சூறையாடப்படும் பல நூறு மில்லியன் பெறுமதியான மீன் வளங்கள்
தினமும் சூறையாடப்படும் பல நூறு மில்லியன் பெறுமதியான மீன் வளங்கள்
எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியால் 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் சூறையாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் தரவுகளின் படி வடக்கு கடற்பகுதியில் இருந்து நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி இழுவைப் படகுகளால் சூறையாடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்துள்ளார்.
எமது வடபகுதி மீனவர்கள் மரபு ரீதியான முறைகளைப் பயன்படுத்தியே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எமது மீனவர்கள் எந்த வித போதிய வருமானமும் இன்றி வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் மக்களாகக் காணப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.