உலகம்

போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது!

Published

on

போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது!

நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை அவர் வென்டிலேட்டரிலிருந்து அகற்றப்பட்டார் என வத்திகான் அறிவித்திருந்தது.

Advertisement

எனினும், நேற்று பிற்பகல் போப்பிற்கு கடுமையான சுவாசப் பிரச்சினைகள் இருப்பதாக வத்திக்கான் அறிவித்தது. இதனையடுத்து வைத்தியர்கள் அவரது நுரையீரலில் இருந்து சளியை அவசரமாக அகற்றினர்.

88 வயதான போப், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 14 ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version