இலங்கை

மின்கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!…

Published

on

மின்கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்!…

இலங்கை மின்சார வாரியம் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின்  தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூயர் ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்

Advertisement

இந்தநிலையில், குறித்த திருத்தத்தினால் மின் உற்பத்தி செலவுகள் கட்டணத்தினால் ஈடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக பீட்டர் புவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை மின்சாரசபை நட்டமடையக் கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக புதிய கட்டணங்களின் காரணமாக செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு கடன் அதிகரித்தால் இலங்கை மின்சாரசபை அரசாங்கத்திற்கு மீணடும் சுமையாக அமையக் கூடும் எனவும் பீட்டர் புவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

எனவே, மின்சார சபையின் செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் மின்கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version