சினிமா
ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை நயன்தாரா
ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா, டயானா மரியா குரியன் என்ற இயற்பெயரை சினிமாவிற்காக நயன்தாரா என்று மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
சமீபகாலமாக இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலமான இவர் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற பாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் திகழ்கிறார்.
2003ம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு நடிகையாக பயணித்து வரும் இந்த பாதையில், மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது.
நீங்கள் பலரும் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்தி இருக்கிறீர்கள். ஆனால், இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்