இலங்கை

லஞ்சம் வாங்கிய பொலிஸ் உயர் அதிகாரியின் மகன்!..

Published

on

லஞ்சம் வாங்கிய பொலிஸ் உயர் அதிகாரியின் மகன்!..

மதுபோதையில் வாகனம் செலுத்திய நபரின் வழக்கினை முடித்து தருவதாக 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபரை வெளியில் விடுவதாக கூறி பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். 

Advertisement

அந்நிலையில் குறித்த நபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய வேளை நீதிமன்று அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , ஒரு மாத காலத்திற்கு சாரதி அனுமதி பத்திரத்தை இடை நிறுத்தியுள்ளது. 

அதானல் பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு பணம் கொடுத்த நபர் , யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறையிட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version