பொழுதுபோக்கு

வாய் பேசாத ஒருவருக்கு இப்படியா? ஆண் பாவம் படத்தில் இந்த சீன் பாருங்க; பாண்டியராஜன் க்ரேட்!

Published

on

வாய் பேசாத ஒருவருக்கு இப்படியா? ஆண் பாவம் படத்தில் இந்த சீன் பாருங்க; பாண்டியராஜன் க்ரேட்!

தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பாண்டியராஜன். இயக்குனர் பாக்யராஜூவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1985-ம் ஆண்டு வெளியான கன்னிராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிரபு, ரேவதி, கவுண்டமணி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்ப்படமாக அமைந்தது. அதன்பிறகு அதே ஆண்டு பாண்டியராஜன் இயக்கி நடித்த படம் தான் ஆண் பாவம்.முழுக்க முழுக்க காமெடி பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நடிகை சீதா திரையுலகில் அறிமுகமானார். மேலும் பாண்டியன், ரேவதி, பாண்டியராஜன், வி.கே.ராமசாமி, கொல்லங்குடி கருப்பாயி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள். ரேவதியை பெண் பார்க்க சென்ற பாண்டியன், தவறுதலாக சீதாவை பெண் பார்த்துவிட்டு அவரை காதலிக்க தொடங்கிவிடுவார். இதை அறிந்த ரேவதி தற்கொலைக்கு முயற்சி செய்வார்.அதன்பிறகு பாண்டியராஜன் தனது அண்ணனின் காதலை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. வெளியான சமயத்தில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில், பிறவியிலேயே வாய் பேச முடியாத ஒருவரை தனது திரை மொழியின் மூலம் பேச வைத்திருப்பார் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன். படத்தில் பாண்டியன் தன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்பதை தெரிந்துகொண்ட ரேவதி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்வார்.ஆனால் அவரை ஊர்காரர்கள் காப்பாற்றிவிட, அவருக்கு பேச்சு வராமல் போய்விடும். இதனால் அவரது அப்பா, ரேவதி பாடிய என்னை பாடச் சொல்லாதே என்ற பாடலை ரேடியோவில் வைத்து கேட்டுக்கொண்டே இருப்பார். ரேவதி மருத்துவமனையில் இருக்கும், அவரது அப்பா பூர்ணம் விஸ்வநாதன், தனது மகளுக்கு ஒன்றும் இல்லையே என்று மருத்துவரிடம் கேட்பார். அப்போது அந்த மருத்தவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இனி அவரால் பேச முடியாது என்று கூறிவிடுவார்.உண்மையில் இந்த வார்த்தையை சொன்ன மருத்துவர் தான் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். இந்த படத்தில் ரேவதிக்கு சைகை பாஷை சொல்லிக்கொடுப்பதற்காக இவரை அழைத்து வந்துள்ளனர். வங்கியில் பணியாற்றி வரும் இவர், பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். தன்னால் அவருக்கு பேச்சு கொடுக்க முடியாது. ஆனால் கலை என்பதை வைத்து அவரை ஒரு காட்சியில் திரையில் பேச வைக்கலாம் என்று நினைத்த பாண்டியராஜன் அந்த மருத்துவர் கேரக்டருக்கு அவரை தேர்வு செய்துள்ளார்.அந்த மருத்துவர் பேசியதை இதுவரை பார்த்திராத அவரது குடும்பத்தினர் திரையில் இந்த காட்சியை பார்த்துவிட்டு, என் மகன் பேசிவிட்டான் என்று பெரிய மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்த தகவலை கவிதா ஜவகர் என்பது கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version