சினிமா

“இப்படிக் கேட்க வேண்டாம்….” தேவா குறித்து பேச மறுத்த இளையராஜா…!

Published

on

“இப்படிக் கேட்க வேண்டாம்….” தேவா குறித்து பேச மறுத்த இளையராஜா…!

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரான இளையராஜா, லண்டனில் நடைபெறும் ‘சிம்பொனி’ இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தவுள்ளார். இதனை அவருடைய இசை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.அந்தவகையில் சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை ஊடகங்கள் சந்தித்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அதன்போது இளையராஜாவிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இசையமைப்பாளர் தேவா குறித்து ஊடகங்கள் அவரிடம் கேட்க முயன்றபோது இளையராஜா  சட்டென பதில் அளித்தார்.இளையராஜா அதில் கூறும்போது , ” நிகழ்ச்சிக்கு முன்பாகவே இந்த மாதிரி கேள்விக எல்லாம் கேட்காதீங்க.. நல்ல நிகழ்ச்சிக்கு போயிட்டு இருக்கேன்..” என்றதுடன் தேவா  குறித்து இதில் கதைக்க வேண்டாம் என்றார். இளையராஜா மற்றும் தேவா இருவரும் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்தவர்கள். இருவரும் வெவ்வேறு இசைநயங்களை கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தவர்கள். எனினும், இசை உலகில் நிலவும் போட்டியால் சில நேரங்களில் அவர்கள் குறித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.இளையராஜா தற்போது தனது இசை வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார். உலகளவில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இவர், இப்போது லண்டனில் மிகப்பெரிய அளவில்  ‘சிம்பொனி’ நிகழ்ச்சியினை நடத்துகிறார். அவரது இசையை நேரில் கேட்க எதிர்பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிகழ்ச்சி லண்டனின் பிரபல அரங்கில் நடைபெறவுள்ளதால் பல முக்கியமான மேடை கலைஞர்கள், இசை பிரபலங்கள் மற்றும் உலகளாவிய ரசிகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஊடகங்களின் கேள்விகளை தவிர்த்தாலும் இசையின் மீது அவர் செலுத்தும் கவனம் மட்டுமே இங்கு பிரதானமாக உள்ளது என்பது புரிகிறது.இளையராஜா இசை உலகில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், அவரின் இசை நிகழ்ச்சிகள் அவருடைய மகத்தான திறமையை உலகறிய செய்கின்றன. அந்தவகையில் லண்டன் நிகழ்ச்சி அவரது இசை வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமையும் என பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version