சினிமா

இளையராஜாவை பாராட்டிய இளையராஜா.. ஆஸ்கர் நாயகனுக்கு இருந்த அடக்கம் இசைஞானிக்கு இல்லையே

Published

on

இளையராஜாவை பாராட்டிய இளையராஜா.. ஆஸ்கர் நாயகனுக்கு இருந்த அடக்கம் இசைஞானிக்கு இல்லையே

கடந்த சில வருடங்களாக எது பேசினாலும் சர்ச்சையில்தான் முடிகிறது. அப்படித்தான் பாடல்கள் காப்புரிமை விஷயத்தில் இவருடைய பெயர் ரொம்பவும் டேமேஜ் ஆனது.

ஒரு சிலர் இவருக்கு ஆதரவு தந்தாலும் பலர் எதிர்ப்பை தான் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இசைஞானி.

Advertisement

அதாவது வரும் 8ம் தேதி லண்டனில் நடைபெறும் சிம்போனி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளையராஜா செல்கிறார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சில வார்த்தைகள் அவர் பேசினார்.

அப்பல்லோ அரங்கில் இந்த இசை வெளியீடு நடக்க இருக்கிறது. வரும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் இது இந்தியாவுக்கான பெருமை. Incredible இந்தியா போல் நான் incredible இளையராஜா என்று கூறினார்.

Advertisement

அது மட்டும் இன்றி இதுபோல் யாரும் வந்தது கிடையாது. இனிமேல் யாரும் வரவும் மாட்டார்கள் என்று பேசியுள்ளார்.

இதுதான் இப்போது சர்ச்சையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இளையராஜா இசையின் ஞானி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இதுவரை யாரும் இப்படி இல்லை என்பதை ஒப்புக்கொள்ளலாம். அதுவரை எல்லாமே சரிதான். ஆனால் இனிமேல் யாரும் வரப்போவதில்லை என்று அவர் எப்படி சொல்லலாம்.

Advertisement

அது தான் தலைகனம். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய போது கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்னார்.

அவருக்கு இருந்த தன்னடக்கம் கூட இளையராஜாவுக்கு இல்லையே. தன்னை தானே பாராட்டி கொள்கிறார் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version