சினிமா

ஒரே இரவில் நடிகையான த்ரிஷா.. எப்படி தெரியுமா? பிரபலம் உடைத்த உண்மை

Published

on

ஒரே இரவில் நடிகையான த்ரிஷா.. எப்படி தெரியுமா? பிரபலம் உடைத்த உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். கடைசியாக இவர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.அடுத்து இவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.இந்நிலையில், நடிகை த்ரிஷாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி பேட்டியில் பகிர்ந்துள்ளார்.அதில், “திரிஷா ஹீரோயின் ஆனது ஒரே இரவில் நடந்த மாற்றம். மும்பையில் இருந்து ஒரு ஹீரோயின், அவர் பெயர் நிலா, அவர் லேட் ஆக படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததால், வேறு நடிகையை தேர்வு செய்ய வேண்டி இருந்தது.அங்கிருக்கும் ஆறேழு பெண்களில் திரிஷா அழகாக இருந்ததால் அவரை ஹீரோயினாக போடும்படி கூறிவிட்டார்கள். இதுதான் சினிமா, தலையில் எழுதப்படும் விதியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என ராதாரவி கூறி இருக்கிறார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version