சினிமா
தளபதி விஜயின் வெற்றிக்கு இதுதான் காரணம்…ஷாமின் அதிரடிக் கருத்து!
தளபதி விஜயின் வெற்றிக்கு இதுதான் காரணம்…ஷாமின் அதிரடிக் கருத்து!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தனது 30 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல சவால்களை சந்தித்துள்ளார். அவர் சிறிய கதாபாத்திரங்களில் தொடங்கி இன்று இந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது இந்த சாதனைக்கு காரணம் அவரது தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் மனவலிமை என்று நடிகர் ஷாம் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும் ஷாம் விஜயின் திரையுலகப் பயணத்தை பற்றியும் பேசியுள்ளார். அத்துடன் விஜய் இவ்வளவு உயரத்துக்கு வருவதற்கு அவருக்கு எவ்வளவு சோதனைகள், கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் ஏற்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாது விஜய் 30 வருட திரையுலகில் அவருக்கு எதிராகவும் அவரைப் பின் தள்ளவும் பலர் முயற்சித்ததாகவும் ஷாம் தெரிவித்தார். அத்துடன் “எத்தனை பேர் அவருக்கு முதுகில் குத்தியிருப்பார்கள்? ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டே போனார்” இதற்கு அவரது தைரியம் தான் காரணம் என்றார்.விஜய், தற்போது அரசியல் மூலம் பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், கல்வி உதவித் திட்டங்கள், மருத்துவ சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறார். இத்தகைய விஜய்க்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று தெரியும் என்றதுடன் அவர் எந்த முடிவையும் திட்டமிட்டு எடுப்பார் என நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். இது விஜயின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.