சினிமா

நடிகர் அபிநைக்கு நடந்த துயரம்…! – திரையுலகினரிடம் உதவி கேட்ட நடிகர்!

Published

on

நடிகர் அபிநைக்கு நடந்த துயரம்…! – திரையுலகினரிடம் உதவி கேட்ட நடிகர்!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் அபிநய். மேலும், ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்த அவர்  தற்போது  லிவர் சிரோசிஸ் எனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.அத்துடன் அபிநய்க்கு தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை பல கட்டங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால், அவரின் மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தற்போது, அவரின் சிகிச்சைக்கு முழுமையாக  28 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுபோன்ற நோய்களுக்கு முன்னரே சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் அபிநய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையை தொடர்ந்தும்  கண்காணித்து மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர்.அபிநய்யின் மருத்துவச் செலவுகளுக்கு திரைத்துறையினர், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியவர்கள் உதவி செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால், இன்னும் தேவையான தொகை முழுமையாக கிடைக்கவில்லை என்பதால் அவருக்குத் தேவையான உதவியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version