இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்துள்ளவர்களை விடுவிக்குக
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்துள்ளவர்களை விடுவிக்குக
ஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்துக்கு இணையனுசரணை நாடுகள் அழுத்தம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் வைத்தே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறையிடப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு இணையனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கனடா, பிரிட்டன், மாலாவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு இணையனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.