இந்தியா
மணிப்பூரில் அடுத்தடுத்து உணரப்பட்ட இரண்டு நில அதிர்வுகள்!
மணிப்பூரில் அடுத்தடுத்து உணரப்பட்ட இரண்டு நில அதிர்வுகள்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் நேற்று காலை 11.06 க்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நில அதிர்வு பதிவானது.
அடுத்ததாக நேற்று நண்பகல் 12.20 க்கு 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நில அதிர்வு பதிவானது.
இந்நில அதிர்வை தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மணிப்பூரில் ஏற்பட்ட இந்நில அதிர்வானது அருகில் உள்ள மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.