இந்தியா

மீண்டும் பணி வழங்க புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது

Published

on

மீண்டும் பணி வழங்க புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 2,642 ஊழியர்களை சட்டமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி தேர்தல் துறை அறிவுறுத்தலின்படி புதுச்சேரி அரசு  பணிநீக்கம் செய்தது. கடந்த 10 ஆண்டுகளாக மீண்டும் பணி வழங்க  வலியுறுத்தி பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டு சம்பளப் பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி மாத சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை அரசு வேலை வழங்க அனுமதி அளிக்கவில்லை என்றும், இந்த கோப்புவிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர்.அதன்படி 50-க்கும் மேற்பட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது, அவர்களை காமராஜர் சதுக்கம் அருகே போலீசார் தடுத்தனர். இதனால் அங்கேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version