சினிமா

அப்போது விஜய் இப்போது தனுஷ்.. கயாடு லோஹரை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Published

on

அப்போது விஜய் இப்போது தனுஷ்.. கயாடு லோஹரை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

இன்றைய தேதியில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை கயாடு லோஹர்.மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வலம் வந்த இவர், சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்த நிலையில், அடுத்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயாடு லோஹரிடம் “உங்களுடைய Celebrity Crush யார்” என கேள்வி கேட்க அதற்கு தளபதி விஜய் என்றும், விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் தெறி என்றும் பதிலளித்திருந்தார்.ஆனால், ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில், “உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்” என ரசிகர் ஒருவர் கேட்க, “தனுஷ் எனக்கு மிகவும் பிடிக்கும், வேறு யாருக்கும் இடமில்லை” என கயாடு லோஹர் கூறியுள்ளார்.இதை கவனித்த நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பேசி கயாடு லோஹர் மாட்டிக்கொண்டார் என கலாய்த்து வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version