பொழுதுபோக்கு

அப்போ ரஜினிக்கு முகம்… இப்போ காஞ்சனா சீரிஸ் நடிகை: இவர் யார்னு தெரியுமா?

Published

on

அப்போ ரஜினிக்கு முகம்… இப்போ காஞ்சனா சீரிஸ் நடிகை: இவர் யார்னு தெரியுமா?

1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் வரும் என் பேரு படையப்பா பாடலில் குழந்தையாக வந்த ஒரு நடிகை தான் ஹிமா பிந்து.சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியுள்ள இவர், இதயத்தை திருடாதே மற்றும் மந்தாகினி போன்ற தொடர்கள் மூலம் ஹிமா தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.நந்தன் லோகநாதனுடன் இணைந்து நடிக்கும் இலக்கியா என்ற தமிழ் சீரியலில் நடித்த ஹிமா பிந்து அதில் இருந்து விலகினாலும் தற்போது சின்னத்திரையில் முன்னணியில் இருந்து வருகிறர்.படையப்பா படத்தில், வைரமுத்து எழுதி ஏ.ஆர்,ரஹ்மான் இசையில் வெளியான “என் பேரு படையப்பா” பாடலில் குழந்தையாக இவர் நடித்திருப்பார்.‘’பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வைத்த குழந்தையப்பா’’ வரிகள் வரும்போது ரஜினிகாந்த் ஒரு குழந்தை முகமாக மாறுவார். அப்போது வரும் குழந்தை தான் ஹீமா பிந்து.சீரியல்களில் நடித்து வந்த ஹிமா பிந்து தற்போது லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா படத்தின் 4-வது பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹீமா பிந்து தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version