இலங்கை

இலங்கை புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள்

Published

on

இலங்கை புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள்

இலங்கை அரசாங்கத்தினால் இன்று (07) முதல் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக புகையிரத சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இதற்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் காட்டு யானைகளின் வளத்தை பாதுகாப்பதுக்காக இன்று(7) முதல் ரயில்வே திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான புதிய ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுத்தியுள்ளது.

Advertisement

இதற்கு அமைய இன்று(7) காலை மட்டக்களப்பில் இருந்து பாடுமீன் கடுகதி புகையிரதம் 6:15 இற்கு புறப்பட்டு கொழும்பை பிற்பகல் 3:30 இற்கு சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து புலத்தசி புகையிரத சேவை நள்ளிரவு 1.30 புறப்பட்டு கொழும்பை மறுநாள் காலை 10 மணியளவில் சென்றடையும்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான புலத்தசி பிற்பகல் 3:15 இற்கு புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் மட்டக்களப்பை வந்தடையும்.

Advertisement

அதேவேளை இதுவரை காலமும் 7 மணிக்கு புறப்பட்ட மட்டக்களப்புக்கான பாடுமீன் கடுகதி புகையிரதம் இன்றிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8:30 அளவில் மட்டக்களப்பை வந்தடையும்.

மேலும் ஏனைய இணைப்பு சேவைகளில் எது வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே புகையிரதத்தில் பயணிக்கும் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு புகையிறத திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version