இலங்கை

இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!

Published

on

இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!

  இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

Advertisement

“நாளை (8) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு எமது அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர்களாக, ரயில் சாரதிகளாக, பாதுகாவலர்களாக பெண்களை இன்னும் சில நாட்களில் பார்க்க முடியும். நாளைய மகளிர் தினத்திற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதேபோல், பாடசாலை பேருந்துகளை பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கனவும் உள்ளது  என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version