இலங்கை
நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள்!
நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள்!
நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இந்த வருடத்திற்குள் பாதுகாப்பானதாக மாற்றப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2025 வரவு-செலவுத் திட்ட உரையின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ரயில்வே மற்றும் இலங்கை போக்குவரத்து சபையில் ரயில்வே காவலர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
நாளைய சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சகம் இந்தக் கொள்கை முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டின் பாடசாலை பேருந்து சேவையை பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தை அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.