இலங்கை
மத்தள விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
மத்தள விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
மத்தள மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை(07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்; மத்தள விமான நிலையத்தை பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இலாபம் ஈட்டும் முயற்சியாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து வருடங்களில் 38.5 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது. எனவே, இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.