இலங்கை

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வியாபாரிகள்; முறைப்பாடுகளை வழங்குங்கள்!

Published

on

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வியாபாரிகள்; முறைப்பாடுகளை வழங்குங்கள்!

அம்பாறை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று (07) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும், நிறக்குறியீடு இல்லாத பானங்களும் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் களும் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே பொதுமக்கள் உங்கள் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களுக்கு அறியத்தருமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version