உலகம்

ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ள அமெரிக்கா!

Published

on

ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ள அமெரிக்கா!

பணயக்கைதிகள் தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா நேரடிபேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகள் விடுதலை தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதை வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலைன் லீவிட் உறுதி செய்துள்ளார்.

Advertisement

மேலும், ஹமாசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் இஸ்ரேலுடன் கலந்தாலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், பணயக்கைதிகள் விவகாரத்திற்கான விசேட பிரதிநிதி அடம்பொஹ்லெர் அமெரிக்க மக்களிற்கு எது சிறந்த விடயமோ அதனை செய்வதற்கு நல்லெண்ணத்துடன் செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.

இதுவரை காலமும் ஹமாசுடன் நேரடிபேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தவிர்த்து வந்துள்ளதுடன் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற வெளிவிவகார கொள்கையை அமெரிக்கா நீண்டகாலமாக பின்பற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஹமாசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரண்டு தடவை நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version