இலங்கை

ஆகஸ்ட் மாதம் பதவி துறக்கும் அர்ச்சுனா எம்.பி

Published

on

ஆகஸ்ட் மாதம் பதவி துறக்கும் அர்ச்சுனா எம்.பி

  ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே பெண்களை துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் பெண்களை எமது தேசிய தலைவர் இணைத்துக் கொண்டார்.

ஆகவே எமது தேசிய தலைவரே பெண்களை முழு உலகுக்கும் துணிச்சல்மிக்க பாத்திரமாக வெளிப்படுத்தினார்.

Advertisement

இசைப்பிரியா படுகொலை, பாலச்சந்திரன் படுகொலை மற்றும் கிருசாந்தி படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தமிழ் மண் நம்பாது ஏனெனில் இவை வெறும் அரசியல் வாக்குறுதிகள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையின் போது சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் எமது தேசிய தலைவரை நினைவுப்படுத்தினார்கள் என்பதை இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

Advertisement

இந்த நாட்டில் பெண்களுக்கு முறையான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு காணப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

பெண்களுக்கு நான் மதிப்பளிப்பேன். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார்.

Advertisement

     

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version