இலங்கை

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

Published

on

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இளஞன் கைதாகியுள்ளார்.

Advertisement

வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் மானிப்பாய் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த போதே சந்தேக நபரான இளைஞன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் யாழ்.போதைப்பொருள் தடுப்பு பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர், 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து கஞ்சா கலந்த மாவா 4 கிலோ 250 கிராம், 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் வாசனைத் திரவியம் போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version