விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்

Published

on

Loading

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்

இன்றைய (மார்ச் 9) தினம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டி,  சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகளில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 2013 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து அணி கடந்த 2000-ஆம் ஆண்டில், நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மூன்றாவது முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், இந்திய அணியை மீண்டும் இறுதிப் போட்டியில் வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் இந்த இறுதிப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை, சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிற்பகல் 1:30 மணி முதல் இந்த ஒளிபரப்பு தொடங்குகிறது. முன்னதாக, அரையிறுதிப் போட்டியும் இவ்வாறு கடற்கரைகளில் திரையிடப்பட்டது.இந்த கிரிக்கெட் சிறப்பு திரையிடலுக்கான நடவடிக்கையை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்னெடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version