பொழுதுபோக்கு

சிம்பொனி அனுபவத்தை அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது – இளையராஜா

Published

on

சிம்பொனி அனுபவத்தை அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது – இளையராஜா

1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசைஞானி இளையராஜா அறிமுகமானார். இவர் தனது இசையில் இதுவரை சுமார் 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ‘இசைஞானி’ இளையராஜா இயற்றியிருக்கும் மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மார்ச் 9 இரவு நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இந்த அரங்கேற்றத்திற்கு பின் பேசிய இளையராஜா,”சிம்பொனி அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அதை நீங்கள் இன்று அனுபவித்திருக்கிறீர்கள்” என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version