சினிமா

படம் ஹிட்டானாலும் லேட்டா தான் பாராட்டு கிடைக்குது…..உண்மையைப் பகிர்ந்த ஜீவா!

Published

on

படம் ஹிட்டானாலும் லேட்டா தான் பாராட்டு கிடைக்குது…..உண்மையைப் பகிர்ந்த ஜீவா!

திரையுலகில் ஒவ்வொரு படத்திற்கும் கிடைக்கும் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்கள் வெவ்வேறு விதமாக காணப்படும். அந்தவகையில் சில படங்கள் உடனடியாக புகழை பெற்றுக்கொள்ளும் சில படங்கள் காலப்போக்கில் தனக்குரிய உண்மையான மதிப்பீட்டை பெற்றுக்கொள்ளும். இந்த நிலையில், நடிகர் ஜீவா தனது படங்களைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.அதில் ஜீவா கூறும் போது, தனது படங்களுக்குப் பெரியளவில் பாராட்டுக்கள் கிடைப்பதில்லை எனக்கூறியுள்ளார். மேலும் “நான் எப்போதுமே உண்மையான பாராட்டுகளுக்காக காத்திருப்பவன். என்னுடைய படங்களுக்கு லேட்டா தான் பாராட்டு வருகிறது” எனக் கவலையுடன் தெரிவித்தார்.குறிப்பாக, ராம், கற்றது தமிழ் மற்றும் சிவா மனசில சக்தி போன்ற படங்கள் வெளியான போது எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தன. பின்னரே அதற்குரிய பாராட்டுக்களும் மதிப்பும் கிடைத்தது என்றார். ஜீவா கூறிய இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்குப் பலரும், “சில படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறாது ஆனால் அது உண்மையான சினிமா ரசிகர்களால் காலத்திற்குப் பிறகு கண்டறியப்படும்” எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.சமீப காலமாக, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் படங்களை உடனடியாக மதிப்பீடு செய்யும் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். அந்தவகையில் ஒரு படம் வெளியானதும் விமர்சனங்கள் புயலாக வருவது வழக்கம். ஆனால், சில படங்கள் காலப்போக்கிலேயே அதன் உண்மையான மதிப்பீட்டைப் பெறுகின்றன என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version