சினிமா

விஷாலுடன் காதல் வதந்தி!! 15 வருட காதலருடன் நிச்சயத்தார்த்தத்தை முடித்த நடிகை அபிநயா..

Published

on

விஷாலுடன் காதல் வதந்தி!! 15 வருட காதலருடன் நிச்சயத்தார்த்தத்தை முடித்த நடிகை அபிநயா..

நாடோடிகள், மார்க் ஆண்டனி, பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து பல மொழிகளில் நடித்த நடிகை என்ற சாதனையும் அபிநயா பெற்றுள்ளார்.விஷாலுடன் நடித்த போது அவருடன் காதல் என்றும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரவி பரபரபை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறேன். என்னுடைய சின்ன வயது நண்பர் தான் என்னோட பாய் ஃபிரெண்ட். 15 ஆண்டுகளாக இந்த உறவு தொடர்கிறது.அவர் என் ஃபிரெண்ட் என்பதால் அவரிடம் எந்த விஷயமாக இருந்தாலும் பேசமுடியும். இன்னும் எங்களின் கல்யாணம் பற்றிய பிளான் எதுவும் பண்ணவில்லை. என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்நிலையில் அபிநயா தன்னுடைய 15 ஆண்டுகால காதலருடன் நிச்சயத்தை முடித்திருக்கிறார். நிச்சய மோதிரத்துடன் Ring the bells, count the blessings—forever starts today! என்று பதிவினை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version