சினிமா

61 வயதிலும் இளமையா இருக்கும் நீதா அம்பானி….! வயதை மீறிய அழகுக்கு இதுவா காரணம்?

Published

on

61 வயதிலும் இளமையா இருக்கும் நீதா அம்பானி….! வயதை மீறிய அழகுக்கு இதுவா காரணம்?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சமீபத்தில் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் இளமை குறித்து பகிர்ந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 61 வயதான நீதா அம்பானி தனது உடலுறுதி மற்றும் இளமைத் தோற்றத்திற்காக தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் “என்னைப் போல ஏனைய பெண்களும் இளமையாக இருப்பதற்கு  உடற்பயிற்சி செய்வது அவசியம்” எனவும் கூறியுள்ளார்.நீதா அம்பானி சமீபத்திய பேட்டியில், தனது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது எப்படி என்பதையும் தவறாமல் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்து வருவது பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார்.மேலும் நீதா அம்பானி , “யார் வேண்டுமானாலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்றதுடன் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமானால் உடற்பயிற்சியை கைவிடாதீர்கள்!” என்று உறுதியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து பலரும் “ நாம் அம்பானி குடும்பத்திலிருந்து ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கற்க வேண்டும்” என கமெண்டில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version