இலங்கை

உடலில் பல்லி விழுவதால் கிடைக்கும் பலன் ; ஜோதிடம் சொல்லும் உண்மை

Published

on

உடலில் பல்லி விழுவதால் கிடைக்கும் பலன் ; ஜோதிடம் சொல்லும் உண்மை

வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது விழுவது இயற்கையானதுதான். ஆனால் ஜோதிட சாஸ்திரங்கள் படி பல்லிக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதால் பல்லி விழுந்த இடத்தை வைத்து பலன்களை கணிக்கின்றனர்.

உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.

Advertisement

நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.

பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.

Advertisement

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.

வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

Advertisement

இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version