சினிமா

உழைக்கும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய KPY பாலா – இன்ஸ்டாவில் வைரலான வீடியோ!

Published

on

உழைக்கும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய KPY பாலா – இன்ஸ்டாவில் வைரலான வீடியோ!

உழைப்பே உயிராக வாழ்ந்து வரும் சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றும் நல்ல மனம் உடையவர்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவரான பிரபல காமெடி நடிகர் KPY பாலா மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பரிசை வழங்கியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ஒரு சாதாரண மனிதன் ஒருவருக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு தையல் மிஷினை நேராக பட்டணத்தில் இருந்து கொண்டு சென்று அந்நபருக்கு வழங்கி பாலா சப்ரைஸ் செய்திருக்கிறார்.அவருடைய போராட்டத்தையும், கடின உழைப்பையும் கண்டு வியந்த பாலா அவருக்கு புதிய தையல் மிஷின் வழங்கினார். இது மட்டுமல்ல, அவருடைய குடும்பத்திற்காக உதவிகளையும் அளித்துள்ளார். இந்த சப்ரைஸைப் பார்த்த அந்த உழைப்பாளி கண்களில் கண்ணீர் வழிந்தது. தன் கனவை நனவாக்கியதற்கு பாலாவுக்கு நன்றி தெரிவித்தார். “நான் துன்பப்பட்டு உழைக்கிறேன். எப்பதான் என் வாழ்க்கை மாறுமோ என நினைத்தேன். இன்று அது நடந்து விட்டது!” என்று அவர் உருக்கமாக பேசினார்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி, பலரின் கவனத்தையும் பெற்றது. பலரும் KPY பாலா போன்ற நல்ல உள்ளங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும்! என்று கமெண்ட் செய்தனர். “உழைப்பை மதிக்கும் மனிதர்கள் இன்னும் இருந்தால் தான், சமூகத்தில் நல்ல மாற்றம் வரும்!” என பலரும் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version