இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்!

Published

on

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் யாழ். மவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் 2025 ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. 

“நிலையான எதிர்காலத்தை உருவாக்க அவள் வலுவான வழிகட்டியாக இருப்பாள்” என்னும் தொனிப்பொருளில் யாழ். பதில் மாவட்ட செயலர் மருதலிங்கம் இந்த நிகழ்வில் பிரதீபன் தலைமையில்  நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மகளிர் விவகார அமைச்சர் சரோயா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்திருந்தார்.

Advertisement

சிறப்பு விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன்,  வடக்கு மாகாண மகளிர் விவகார் அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், யாழ். மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் யாழ். மாவட்ட மேலதிக செயலர் ஸ்ரீமோகன்,  மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள்,  மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள்,  உளவளத்துணை உத்தியோகத்தர்கள், மாவட்ட மகளிர் சம்மேளன பிரதிநிதிகள், பெண் முயற்சியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

குறித்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் யாழ். மாவட்டத்தை உள்ளடக்கிய 15 பிரதேச செயலகங்களின் பெண் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்படு சான்றிதளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version