சினிமா

லேடி சூப்பர் ஸ்டாரா!, நயனை செஞ்சுவிட்ட 90ஸ் ஹீரோயின்.. ரக்கடான ஆளா இருப்பாங்க போலயே!

Published

on

லேடி சூப்பர் ஸ்டாரா!, நயனை செஞ்சுவிட்ட 90ஸ் ஹீரோயின்.. ரக்கடான ஆளா இருப்பாங்க போலயே!

ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும் என்று சொல்வார்கள். எப்போதும் நிலைமை ஒரே மாதிரி இருக்காது என்பதுதான் இதற்குப் பொருள்.

அப்படி நிலைமை கொஞ்சம் மாறி இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. மார்க்கெட் கொடி கட்டி பறந்த காலத்தில் நயன்தாரா செய்த அட்ராசிட்டிகள் அதிகம் என சினிமா பிரபலங்கள் சமீப காலமாக பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் தான் நிலைமை தனக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்டு என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடாதீர்கள் என்று சொல்லி இருந்தார்.

சரி இப்போ உங்களை யாரு லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னது என மொத்தமாய் ட்ரோல் பண்ணி விட்டார்கள் இணையவாசிகள்.

போதாத குறைக்கு 90ஸ் ஹீரோயின் குஷ்பூவிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான்.

Advertisement

அந்த பட்டம் அவருக்கு மட்டும் தான் சொந்தம். அவருக்கு அடுத்து இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்ல கூடாது, அந்தப் பட்டம் அவரை தவிர யாருக்கும் பொருந்தாது என பேசி இருக்கிறார்.

சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் படம் தான் நயன்தாராவின் கடைசி நம்பிக்கையாக இருக்கும்போது அவருடைய மனைவியே நயன்தாராவை வச்சி செய்து இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version