பொழுதுபோக்கு
ஸ்ரீதேவி நடித்த படத்தின் 2-ம் பாகம்: கணவர் போனி கபூர் சொன்ன புதிய அப்டேட்; யார் நடிக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவி நடித்த படத்தின் 2-ம் பாகம்: கணவர் போனி கபூர் சொன்ன புதிய அப்டேட்; யார் நடிக்கிறார் தெரியுமா?
தமிழகத்தில் பிறந்து இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி இப்போது இல்லை என்றாலும், அவர் கடைசியாக நடித்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க உள்ளதாக அவரது கவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரீதேவி, 1972-ம் ஆண்டு வெளியான ராணி மெரா நாம் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 16 வயதினிலே படத்தின் இந்தி ரீமேக்கான, சொல்வா சவான் என்ற படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதேவி, கடைசியாக, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மாம் என்ற படத்தில் நடித்திருந்தார். போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி மரணமடைந்தார். தற்போது ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளாக வலம் வருகின்றனர். இதில் ஜான்வி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.அதேபோல், 2023 ஆம் ஆண்டு தி ஆர்ச்சீஸ் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் குஷி கபூர். ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா உள்ளிட்ட சிலர் இந்த படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், குஷி கபூர் தனது நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதனைத் தொடர்ந்து லவ்யபா படத்தில் ஆமிர் கானின் மகன் ஜுனைத் கானுடன் இணைந்து நடித்திருந்தார். இருப்பினும், சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் அலி கானின் அறிமுகமாகுமான நடானியன் படத்தில் நடித்தததற்காக குஷி கபூர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.இதனிடையே குஷி கபூரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவரது அம்மா ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் படத்தின் 2-ம் பாகத்தில் குஷி கபூர் நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விருது வழங்கும் விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய குஷி கபூரின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான போனி “நான் குஷியின் ஆர்ச்சீஸ், லவ்யபா மற்றும் நடானியன் என அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். நோ என்ட்ரிக்குப் பிறகு அவளுடன் ஒரு படத்தையும் திட்டமிடுகிறேன். இது குஷியுடன் ஒரு படமாக இருக்கும். அது மாம் 2-ஆக இருக்கலாம். அவளுடைய பணியாற்றிய அனைத்து மொழிகளிலும் உச்ச நட்சத்திரம். குஷியும் ஜான்வியும் அவர்களது அம்மா அளவுக்கு உச்ச நட்சத்திரமாக வருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.