இலங்கை

50 அடி பள்ளத்தில் பாய்ந்த மகிழுந்து ; மூவர் பலத்த காயம்

Published

on

50 அடி பள்ளத்தில் பாய்ந்த மகிழுந்து ; மூவர் பலத்த காயம்

நுவரெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் பொரலந்த பகுதியில், மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றதாகவும், கந்தபளையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

பலத்த மழையுடனான காலநிலை காரணமாகவே குறித்த மகிழுந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50 மீட்டர் அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மகிழுந்தில் பயணித்த 3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விதத்தில் மகிழுந்து முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

Advertisement

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version