சினிமா

அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் நயன்தாராவை ஓவர்டேக் செய்த நடிகை.. அட இவரா

Published

on

அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் நயன்தாராவை ஓவர்டேக் செய்த நடிகை.. அட இவரா

கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாக முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் வலம் வந்தவர்கள் நயன்தாரா மற்றும் த்ரிஷா.தற்போது இந்த நடிகைகளை ஓவர்டேக் செய்து சில நடிகைகள் 2025 – ல் அதிகம் சம்பளம் பெற்ற நடிகைகளின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்துள்ளனர்.அந்த நடிகைகள் யார் என்பது குறித்து கீழே காணலாம்.2024 – ம் ஆண்டு வரை ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த நடிகை சாய் பல்லவி. அமரன் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.தற்போது இவர் பாலிவுட்டில் இராமாயணம் படத்தில் நடிக்க ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்று அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க ரூ. 15 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளார் ராஷ்மிகா. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக ரூ.13 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.கடந்த ஆண்டு அதிகம் சம்பளம் பெற்ற நடிகைகளில் நம்பர் 1 இடத்தை பிடித்த த்ரிஷா தற்போது 4 – வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது விஸ்வம்பரா படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.சினிமாவில் இருந்து விலகி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிய சமந்தா நடிப்பில் கடைசியாக சிட்டாடெல் வெப் தொடர் வெளிவந்தது. இதில் நடிக்க சமந்தா ரூ. 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version