சினிமா

அரசியல் ஆட்டத்தைத் தொடங்கிய தளபதி…! – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Published

on

அரசியல் ஆட்டத்தைத் தொடங்கிய தளபதி…! – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பற்றி சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, ‘அண்ணன்’ என்ற அடைமொழியுடன் விஜய் தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது, அவரது அரசியல் பயணத்தின் உறுதியான முதல் கட்ட நடவடிக்கையாக பலரும் பார்க்கின்றார்கள்.விஜயின் ரசிகர்கள் அவரை ‘தளபதி’ என்று கொண்டாடி வரும் நிலையில் தற்பொழுது ‘அண்ணன்’ என்ற புதிய அடைமொழி அவரது அரசியல் வாழ்க்கைக்கு புதிய மாற்றத்தைக் கொண்டு வருமா? என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.மேலும் மக்கள் மத்தியில் அண்ணன் என்று அழைப்பது ஒரு குடும்ப உறுப்பினரை உணர்த்தும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது விஜயின் அரசியல் நோக்கத்தில் பொதுமக்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு அடைமொழியாக இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.சமீபமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார். இப்போது, ‘அண்ணன்’ என்கிற பெயருடன் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது  அவரது அரசியல் கட்டத்தின் அடுத்த கட்டமாக காணப்படுகிறது. இதற்குப் பல ரசிகர்கள் ஆதரவு செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version