இலங்கை
இலங்கையில் உருவாகியுள்ள பல்சமய இல்லம்!
இலங்கையில் உருவாகியுள்ள பல்சமய இல்லம்!
சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் பல்சமய இல்லம் 2012 முதல் திட்டமிடப்பட்டு 2014 முதல் நிலையான இடத்தில் செயற்பட்டு வருகின்றது. பல்சமய இல்லத்தில் சமய நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை அற்றவர்கள் என வேறுபாடு இல்லாமல் மனிதர்களாக இந்த இடத்தில் ஒன்று கூடுகின்றனர்,
பொதுவாக நடைபெறும் நிகழ்வுகளில் தங்களது எண்ணங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
மக்கள் தமது சமயப் பண்பாட்டுப் பண்டிகைகளை இங்கு கொண்டாடுகின்றனர் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.
எடுத்துக்காட்டாக இங்கு பல்வேறு பண்பாடுகளின் பார்வையில் படைப்பியல் குறித்துப் புரிந்துகொள்ளலாம், யோகக்கலைப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அல்லது சிறிது ஓய்வெடுத்து, சமயங்களின் ஒருங்கிணைந்த இசையை கேட்டு மகிழலாம். யூதர்கள், பஹாய் மக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட பலரும் மதங்களின் இல்லத்தில் தங்களுடைய பங்களிப்பை வழங்குகிறார்கள்.
சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் பல்சமய இல்லம் உருவாகும் எண்ணம் 2000ஆம் ஆண்டிலேயே உருவாகியது. ஆனால் முதலில் தேவையான பொருள் வளத்தை (நிதியை) திரட்ட வேண்டும் என்பதே பெரும் சவாலாக இருந்தது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கனவு நினைவாக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சமயங்களின் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) முதலில் காற்கோள்விழாவில் ஒன்று கூடினர். 2014ஆம் ஆண்டு மார்கழி 14ம் திகதி கட்டிடப்பணி முடிவடைந்தது.
இன்று பல்சமய இல்லம் சமயங்களிலிடையேயான பரிமாற்றத்திற்கான முன்னுதாரணமாக, சுவிட்சர்லாந்தின் தலைநகரில் அமைந்துள்ள ஐரோப்பா திடலில் விளங்குகின்றது.
பலரும் மகிழ்ச்சியுடன், தங்கள் மதங்களை பார்வையாளர்களுக்கு விளக்கி, பல தவறான எண்ணங்களை நீக்க முனைந்துள்ளனர்.
இதில் எண்சமயங்களும் உறுப்பினர்களாக உள்ளன. ஐந்து சமயங்கள் தமது வழிபாட்டு இடங்களை இவ் இல்லத்துடன் பங்களாராக இணைத்துக்கொண்டு உறுப்பினர்களாக உள்ளனர்.
இணக்கமான நிகழ்வுகள், சமய உரையாடல்கள் என்பது தம்மை இழிந்து பிறிதை ஏற்பது அல்ல, தமது அடையாளத்துடன் நம்பிக்கையுடன் பிறரை மதிப்பதும், பிற கருத்தை தத்துவத்தை ஒரே நிகரில் வைத்துப்பதுமே பல்சமய இல்லத்தின் நோக்கம் ஆகும்.
இதே நோக்கத்துடன் இலங்கையில் இத்திட்டத்தினை நினைவாக்கும் முயற்சியில் சைவநெறிக்கூடம் முனைந்துள்ளது. இதன் சிறப்புக்கூட்டம் 11. 03. 2025 புத்தளத்தில் நடைபெற்றது. இதில் நான்கு சமயத்தின் சார்பாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)