சினிமா
இலங்கை வந்த கீர்த்தி சுரேஷ்..! ஏன் தெரியுமா..?
இலங்கை வந்த கீர்த்தி சுரேஷ்..! ஏன் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமாகிய நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகிய தெறி டப்பிங் திரைப்படமான “பேபி ஜான் ” எனும் படத்தில் நடித்து இருந்தார். மேலும் இவர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.தற்போது தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருகின்றார்.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) சில்க் ரூட்டில் இலங்கை விமான படையினரால் சிறப்பாக வரவேற்கப்பட்டார். கீர்த்தி சுரேஷின் இலங்கை வருகையுடன் அவரது ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகம் காணப்பட்டது.மேலும் “பராசக்தி ” படக்குழு ஏற்கனவே இலங்கையில் படமாக்க பட்டு வருகின்றது. இதனால் தற்போது இவரின் வருகை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.இதனால் ஜெயம் ரவியுடன் இணைந்து இலங்கைக்கு வந்துள்ள இந்த நடிகை புதிய படப்பிடிப்பு பணிகளுக்காக தயாராக உள்ளாரா இல்லை பராசக்தி படப்பிடிப்புக்காக தான் வந்தார்களா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.