இலங்கை

உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது

Published

on

உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது

அடுத்த சில ஆண்டுகளில் உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று உலக லிட்ரோ எரிவாயு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை மெட்ரிக் தொன்னுக்கு 600, 700 மற்றும் 800 அமெரிக்க டொலர்களுக்கு இடையில் இருக்கும் அதன் பணிப்பாளர் டேவிட் டைலர் தெரிவித்தார்.

Advertisement

இருப்பினும், அது ஆயிரம் டொலர் மதிப்பை எட்டாது என நம்புவதாக டேவிட் டைலர் சுட்டிக்காட்டினார்.

லாஃபிங் கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இந்நாட்டின் எல்பி எரிவாயுவின் விலை சவுதி ‘எரம்கோ’ விலைக் சுட்டெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், அந்தக் சுட்டெண்ணின் விலை தற்போது 650 முதல் 700 அமெரிக்க டொலர்கள் வரை ஏற்ற இறக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version